இந்த அறிகுறிகள் எல்லாம் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயமாக ஏதோ ஒரு செய்வினை சம்பந்தப்பட்ட விஷயம் வீட்டில் இருக்கிறது என்று தான் அர்த்தம்.
நாம் அறிவுக்குப் புலப்படாத, நம் கண்ணுக்கு புலப்படாத எத்தனையோ கெட்ட சக்தி இந்த பூமியில் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறது. நமக்கு கஷ்டம் வருவதற்கு எல்லாம் காரணம் செய்வினை என்று நினைத்துக் கொள்ளக் கூடாது,
அதேசமயம் கஷ்டங்கள் வரும்போது அந்த கஷ்டங்களுக்கு எல்லாம் காரணம் நம்முடைய கெட்ட நேரம் மட்டும்தான் என்றும் நினைத்துக் கொள்ளக்கூடாது. இதற்கு வேறு ஏதும் பின்னணி உள்ளதா, என்பதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சிறிய அளவில் பிரச்சனை இருக்கும் போதே அதை சரி செய்ய முடியும்.
பிரச்சினைகள் பெரியதாகி விட்டால் கஷ்டமும் பெரியதாகிவிடும். பிறகு அதை சரி செய்வதில் சில சிரமங்கள் இருக்கும். அந்த வரிசையில் உங்களுடைய வீட்டில் ஏதேனும் செய்வினைக் கோளாறு ஏவல் பில்லி சூனிய கோளாறு கெட்ட ஆத்மாக்களின் ஆதிக்கம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒரு சில அறிகுறிகளும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
நம்முடைய குல தெய்வமும், நல்ல தேவதைகளும், வாஸ்து தேவதையும் வாழக்கூடிய இடம்தான் நிலை வாசல். குடும்ப தலைவருக்கு அடிக்கடி நிலை வாசல் கதவில் கட்டை விரல் அடிபட்டுக் கொண்டே இருந்தால், உங்கள் வீட்டு குலதெய்வம் உங்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வருகிறது என்று அர்த்தம்.
நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கைபடி, பல்லி, காகம் இந்த இரண்டுமே இறை சக்தி நிரம்பிய ஒரு உயிரினமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் பல்லி நடமாட்டமே சுத்தமாக இல்லை என்றால் அந்த வீட்டில் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத பிரச்சனை இருப்பதாக அர்த்தம் என்று சொல்லப்பட்டுள்ளது.
சில வீடுகளில் காகம் வரவே வராது. அந்த வீட்டு பக்கம் காகம் வருவதை நாம் பார்த்து கூட இருக்க மாட்டோம். அப்படி காகம் வராமல் பல்லியே வராமல் இருப்பதும் சில அபசகுனங்களை குறிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
சில வீடுகளில் நன்றாக செழிப்பாக வளர்ந்த துளசி செடி, வேப்பஞ்செடி, அல்லது நீங்கள் ஆசை ஆசையாக வளர்த்த ஏதாவது ஒரு செடி பட்டென பட்டுப்போகும். இப்படி செடிகள் பட்டுப்போன பின்பு அந்த வீட்டில் பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்திருக்கும் அப்போது உங்களுடைய வீட்டில் கட்டாயம் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கிறது என்று தான் அர்த்தம். சில வீடுகளில் அவர்கள் உயிருக்கு உயிராக வளர்த்த வளர்ப்பு பிராணிகள் கூட உயிர் இழந்திருக்கும். அந்த வளர்ப்பு பிராணி உயிரிழந்த உடன், இவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய இடி விழக்கூடிய சம்பவம் நடக்கும். இப்படி இருந்தாலும் அது கெட்ட சக்தி இருப்பதின் அறிகுறிதான்.
குலதெய்வ கோவிலுக்கு செல்லவே முடியாது. நேர்த்திக்கடனை செலுத்த முடியாது. குலதெய்வ பூஜையை வீட்டில் செய்யவிடாமல் தடுக்கும். இப்படி இருந்தாலும் உங்கள் குடும்பத்திற்கு ஏதோ ஒரு செய்வினை பாதிப்பு இருப்பதாக அர்த்தம். எல்லாம் தயாராக இருக்கும் கடைசி நேரத்தில் குலதெய்வ வழிபாட்டை செய்ய முடியாமல் போய்விடும்.
சில பேருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். சில பேருக்கு எப்போதும் உடம்பில் நெருப்பு வைத்தது போல ஒரு எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். நன்றாக சுறுசுறுப்பாக வேலை செய்தவரால் வேலை செய்ய முடியாமல், எந்த நேரமும் சோர்ந்து போய்விடுவார்கள். ஒரு இடத்திலேயே முடங்கிக் கிடப்பார்கள். முகம் பொலி விழுந்து காணப்படும். இப்படி எல்லாம் இருந்தால் அவர்களுடைய உடம்பில் ஏதோ ஒரு கெட்ட சக்தியின் ஆதிக்கம் இருப்பதை நம்மால் கண்டுபிடித்து விட முடியும்.
சில வீடுகளில் சுவாமிக்கு வாசம் நிறைந்த சாம்பிராணியை ஏற்றி வைத்தால் வாசமே சுத்தமாக இருக்காது. அந்த இடத்தில் கட்டாயம் ஏதோ ஒரு கெட்ட சக்தி உலாவுது என்றுதான் அர்த்தம். உங்களுடைய கனவில் உங்கள் நிலை வாசலில்லோ அல்லது வீட்டிற்குள்ளேயோ காளை மாடு வருவது போல கனவு வரவே கூடாது.
ஜாதகபலன் அறிந்துகொள்ள
9445258166 என்ற தொலைபேசி எண்ணிற்கு அனுகவும்